வெசாக் தினமான இன்று, பௌத்த மக்கள் வீடுகளில் சமய வழிபாடுகளை மேற்கொண்டனர்
வெசாக் தினமான இன்று, பௌத்த மக்கள் வீடுகளில் இருந்தவாறு சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர். நாட்டின் தற்போது நிலவும் கொவிட் நெருக்கடியை கருத்திற் கொண்டு வீடுகளில் இருந்தவாறு சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மஹா சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஜயஸ்ரீ மஹாபோதி, தலதா மாளிகை, அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பிரதான பௌத்த சமய தலங்களில் பக்தர்களின் பங்கேற்பின்றி, வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தார்கள்.
கொவிட் தொற்று காரணமாக சுகாதார விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பங்களில் மக்கள் இணையதளங்களின் ஊடாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெசாக் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதனை பாராட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது.