எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இம்மாதம் 31ம் திகதி வரை விமான நிலையங்களின் பயணிகள் வருகை தரும் பகுதி மூடப்படவுள்ளது
21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் உட்பிரவேசிக்கும் முனையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் நாட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு திட்டமிடப்பட்டவாறு சேவைகள் வழங்கப்படும் என சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் சரக்கு விமான சேவைகள் முறையாக இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.