புறக்கோட்டை மிதக்கும் சந்தை நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது
புறக்கோட்டை மிதக்கும் சந்தை புனரமைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் நாளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முறையான பராமரிப்பு இல்லாமையினால் இந்தப் பகுதி கைவிடப்பட்டிருந்தது.
பிரதமரின் பணிப்புரைக்கமைய, மூன்று கோடி 50 லட்சம் ரூபா செலவில் மிதக்கும் சந்தை புனரமைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இது திறந்து வைக்கப்பட்டது.
மிதக்கும் சந்தையில் 103 வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன. கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இது மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.