அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தவணை இன்று முடிவுக்கு வருகின்றது
நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளுக்கும் – அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணை இன்று முடிவடைவதைக் கருத்திற்கொண்டு இந்த விடுமுறை வழங்கப்படவிருக்கிறது. கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாவதைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.