பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை வரவிருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை வரவிருக்கிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளவிருக்கிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். வர்த்தகம், முதலீடு, இராஜதந்திர தொடர்புகள் உட்பட பல்வேறு விடயங்கள் பற்றியும் இதன் போது ஆராயப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.