அமெரிக்காவின் பல மாநிலங்களை திறக்க நடவடிக்கை
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவிவரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் போது, அமெரிக்க மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலையை நீக்கி, மாநிலங்களை திறந்து விடுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கொவிட்-19 நோயால், 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை அண்மிக்கின்றது.
இந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்துவது பொது சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என அமெரிக்க உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு நாடு தழுவிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மே மாதம் 6ஆம் திகதி வரை இந்த அவசரகால நிலை அமுலில் இருக்கும்.
கொவிட்-19 நோய் தொற்றால் உலகளாவிய ரீதியில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதேநேரம் இந்த தொற்றால் இதுவரை 21 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, ஐந்து லட்சத்து 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை கொனா தொடர்பான கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.