பிரதான நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கொழும்பு நகரத்திற்கான நீர் விநியோகம் தடை.
அம்பத்தலை தொடக்கம் கொழும்பு மாளிகாவத்தை வரையிலான பிரதான நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் கொழும்பு நகரின் சில பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 01, 02, 03, 06, 07, 08, 09, 10, 11, 12, 13 ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் வழங்கலில் தடை ஏற்பட்;டுள்ளது. இருப்பினும், கொழும்பு 4, கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறுவதாக சபை தெரிவித்துள்ளது.
திருத்தப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதனால். இன்றிரவு 10 மணியளவில் வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் என்றும் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் ரஞ்ஜித் சமரசிங்க தெரிவித்துள்ளார்.