அபிவிருத்தி அதிகாரிகளுக்கான சேவைப் பிரமாணம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அபிவிருத்தி அதிகாரிகள் சேவைக்கு எதிர்வரும் ஏப்ரல் மாத முடிவிற்குள் புதிய சேவைப் பிரமாணம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி அதிகாரிகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் போது அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இது தொடர்பான உத்தரவை வழங்கினார்.
ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சேவைப் பிரமாணத்தை தயாரிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. பொருத்தமற்ற கடமைகளில் ஈடுபடுத்தல், தடை தாண்டல் பரீட்சை இடம்பெறாமை, நிரந்தர நியமனம் வழங்கப்படாமை உட்பட பல்வேறு யோசனைகள் இதன் போது முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.