கண்டி திகண கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித இழப்பீடு – பிரதமர் அறிவிப்பு.
கடந்த மார்ச் மாதம் கண்டி திகன பிரதேசத்தில் விளைந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இழப்பீடு வழங்க 20 கோடி 50 இலட்சம் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டு;ள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தக் கலவரங்களில் சேதமடைந்த சொத்துக்களுக்காக ஏற்கனவே ஒரு கோடி 80 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார். இன்று பாராளுமன்றத்தி;ல் அங்கத்தவர் வேலு குமார் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பிரதம மந்திரி பதில் அளித்தார்.
பயங்கரவாத அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த வவுனியா ஆசிரியர் கலாசாலையின் சிங்களப் பிரிவை மீ;ண்டும் திறப்பதென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்னாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, இதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.